தனியார் பஸ், டிராக்டரை முந்த முயன்றபோது விபத்து…
மயிலாடுதுறை: சீர்காழியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் காயமடைந்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று சீர்காழி தென்பாதி என்ற இடத்தில் முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்று உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர், பஸ் மீது உராய்ந்து உள்ளது. இந்த விபத்தில் பஸ்சில் படிகட்டில் நின்று பயணம் செய்த சபாநாயகம் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மணல்மேடு சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் மகன் விஜயராஜ்,15, என்ற மாணவரும், புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் சட்டநாதபுரத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் அர்ஜுனன்,17, என்ற மாணவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் விஜயராஜ் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.