கலையை மதம் புறக்கணிக்கிறது: சசிதரூர் வேதனை!

புதுடில்லி: கேரள கோவிலில், ஹிந்து மதத்தை சாராத ஒருவரின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு ‘கலையை மதம் புறக்கணிக்கிறது’ என காங்., – எம்.பி., சசிதரூர் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழாவில் மான்சியா என்பவரின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏப்., 21ல் நடப்பதாக இருந்தது. சமீபத்தில் அவரை தொடர்பு கொண்ட கோவில் நிர்வாகிகள், அவர் ஹிந்து இல்லை என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என, தெரிவித்து உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.