இறுதி கட்டத்தில் எம்.எஸ்.பி., குழு அமைக்கும் பணி!!

புதுடில்லி : மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் பதிலளித்த, விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ”எம்.எஸ்.பி.,யை உறுதி செய்வதற்கான குழுவை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது,” என, தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.