வாகன ஓட்டிகளே உஷார்.. விதிமீறினால் உடனடி அபராதம்!!

சென்னை: போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் ‘நம்பர் பிளேட்’டை துல்லியமாக படம் பிடிக்கும் நவீன கண்காணிப்பு கேமராக்கள், அண்ணா சாலை உட்பட 11 பிரதான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், உடனடியாக அபராதம் வசூலிக்கும் நடைமுறையும் சில தினங்களில் துவங்கப்பட உள்ளன.

சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பின், சட்டம்- ஒழுங்கு மட்டுமின்றி, போக்குவரத்து பிரிவிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.தற்போது, தேனாம்பேட்டை அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை உள்ளிட்ட, 11 பிரதான சாலைகளில், 10 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.