மோடியிடம் ராஜ்யசபா எம்.பி.க்கள் வலியுறுத்தல்!!
புதுடில்லி : வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகள் மற்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு நிதியுதவி செய்ய ‘ராஷ்ட்ரீய ஆரோக்கிய நிதி’ என்ற திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் எந்த மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியும்.இத்திட்டத்தின்கீழ் அரியவகை நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் நிதியுதவி செய்ய வலியுறுத்தி பிரதமர்மோடிக்கு ராஜ்யசபா எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர். இதுகுறித்து ஆலோசனை நடத்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.