மே.வங்க வன்முறை: பலி 9 ஆக உயர்வு!!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில்வன்முறைக் கும்பல்தீ வைத்த சம்பவத்தில் உயிர்இழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ். துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங். கட்சியை சேர்ந்த பாதுஷேக் என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்குள் புகுந்த ஒரு கும்பல் அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது.

இதில் இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் நஜிமா பீவி என்ற பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்து உள்ளது. ஒரு சிறுவன் உட்பட 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.