பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது.
பார்லிமென்ட் நேற்று கூடியதும், இரு சபைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், ‘நோட்டீஸ்’ அளித்து இருந்தனர்.
தவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும் விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கேட்டுஇருந்தனர். ராஜ்யசபா கூடியதும், சபைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், ”பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பொது வேலைநிறுத்தம் குறித்து பேச அனுமதி இல்லை. அதேசமயம், இவை குறித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பின்னர் பேசலாம்,” என்றார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.