‘பார்முலா 1’ கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி!!

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா 1’ கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 2-வது சுற்றான சவூதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. 
308.45 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இதில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 24 நிமிடம் 19.293 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். 

முதல் சுற்றில் வெற்றி பெற்ற மொனாக்கோ வீரர் சார்லஸ் லெக்லெர்க் (பெராரீ அணி) 2-வது இடத்தையும், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் சைன்ஸ் (பெராரீ அணி) 3-வது இடத்தையும் பெற்றனர். 7 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்த சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரி போட்டி ஏப்ரல் 10-ந் தேதி நடக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.