சக்திவாய்ந்த ஆயுதங்களை வடகொரியா உருவாக்கும் – கிம் ஜாங்-வுன்!!
கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, ‘வாசோங் – 17’ பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்ககாவை தகர்க்கும் திறனுடைய இந்த ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் வாசோங் – 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுதங்கள் திறன்கள், அமோகமான ராணுவ பலம் இருந்தால்தான், போரைத் தடுக்க முடியும், நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும், ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முடியும் என்று கிம் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று மேற்கோளிட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.