கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை. துணைவேந்தராக கீதாலட்சுமி நியமனம்!!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக கீதாலட்சுமி நியமனம் செய்து தமிழக கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கீதாலட்சுமி, 3 ரக புதிய விதைகளையும், 8 புதிய தொழில்நுட்பங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும் வேளாண் கால ஆய்வுகள் செய்திட மழைமானி அமைக்க வழிவகுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.