இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தது!!
புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 15,378 ஆக குறைந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,259 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,21,982 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,705 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,85,534 ஆனது. தற்போது 15,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.