பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்காக கன்னியாகுமரியில் பிரம்மாண்ட செட்..!!
11 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த படத்தில் அதர்வா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் கடற்கரையை பின்னணியாக கொண்டு கன்னியாகுமரியில் பிரமாண்டமான கிராமத்து செட் அமைத்து உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு கதாபாத்திரம் மீனவர் வேடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் சூர்யா, வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் சமீபத்தில் தொடங்கியது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.