பஸ்கள் ஸ்டிரைக்: தமிழகத்தில் மக்கள் பாதிப்பு!

புதுடில்லி: நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. தமிழகத்தில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும் மொத்த 15, 335 பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தம் தமிழகத்தில் 67 % பஸ்கள் இயங்கவில்லை.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.