‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி 6-வது வெற்றி!!!

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 
இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். அணி 23-25, 25-23, 25-17, 25-18 என்ற செட் கணக்கில் தமிழ்நாடு போலீசை வீழ்த்தி 6-வது வெற்றியை பதிவு செய்தது. இதே போல் ஐ.ஓ.பி. அணி 25-20, 25-18, 20-25, 25-16 என்ற செட் கணக்கில் லயோலாவை தோற்கடித்து 5-வது வெற்றியை சுவைத்தது. 

மற்ற ஆட்டங்களில் டி.ஜி. வைஷ்ணவா 24-26, 25-16, 23-25, 25-23, 15-10 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோப்சையும், சுங்க இலாகா 25-22, 25-18, 25-20 இந்தியன் வங்கியையும் வென்றது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.