13 யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்!!!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கூவமூலா பகுதியில் தேயிலைத்தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள புதர் பகுதியில் மூன்று சிறு குட்டிகளுடன் 13 யானைகள் முகாமிட்டுள்ளது. அருகே தொழிலாளர்கள் பணியாற்றியபோதும், அதனை கண்டுக்கொள்ளாத யானைக்கூட்டம், உணவுத்தேவையை மட்டுமே பூர்த்தி செய்கிறது. குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டுள்ளதாலும், இந்த பகுதியில் சிறுத்தைகள் உள்ளதால், யானைக்குட்டிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.