முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கு பிரத்யேக ஸ்கூட்டர் தயாரிப்பு!!
அவிநாசி: முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது; விரைவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் சார்பில் வழங்கப்பட உள்ளது.
போலியோ உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கை, கால் செயலிழந்தவர்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களால், அந்த ஸ்கூட்டரில் அமர்ந்து ஓட்ட முடியாது என்பதால், பிரத்யேக ஸ்கூட்டர் வடிவமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில், வீடுகளில் உள்ளது போன்று சாய்ந்து அமரும் வகையிலான இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக அமர்ந்து செல்ல முடியும். தாலுகா வாரியாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு எண் பெறும் பணி நடந்து வருகிறது.’விரைவில், பிரத்யேக ஸ்கூட்டர் பயனாளிகளுக்கு வழங்கப்படும்’ என அதிகாரிகள் கூறினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.