பழைய ஓய்வூதியத் திட்டம் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் – எஸ்.பி.ஐ., எச்சரிக்கை!!
மும்பை: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது நாட்டின் வளர்ச்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் சுமையாக மாறும் என எஸ்.பி.ஐ., வங்கியின் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மணி எழுப்பப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பலரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரி வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குகளை அள்ளினார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்துவதாக அறிவித்துள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.