தமிழகத்தில் தொழில் துவங்க அரபு நாடுகளுக்கு முதல்வர் அழைப்பு!!
சென்னை : தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலை குறித்து, ஐக்கிய அரபு நாடுகளின் அமைச்சர்களிடம், முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
முதல்வர் ஸ்டாலின், துபாய், அபுதாபி நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். துபாய் பன்னாட்டு நிதி மையத்தில், ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை, முதல்வர் நேற்று சந்தித்தார்.
சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்; தொழில் சூழலை மேம்படுத்துதல்; விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற துறைகளில் உறவுகளை மேம்படுத்துவது குறித்து, ஆலோசனை செய்யப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.