இளம்பெண் கூட்டு பலாத்காரம்; சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவக்கம்!!
விருதுநகர் : விருதுநகரில், இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை துவக்கினர்.
விருதுநகரில் 22 வயது இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பால்பண்ணை உரிமையாளர் ஹரிஹரன், தி.மு.க., இளைஞரணி வார்டு அமைப்பாளர் ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன், 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அரசு உத்தரவையடுத்து, இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம், போலீசார் ஒப்படைத்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.