ரூ.50 லட்சம் நஷ்டஈடு; சிம்புவுக்கு கோரிக்கை!!

சென்னை:’கார் விபத்தில் மரணமடைந்த மாற்றுத்திறனாளிக்கு குடும்பம் இல்லாததால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நடிகர் சிம்பு, 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என மாற்று திறனாளிகள் நலச் சங்கம் கோரியுள்ளது.

சங்க பொதுச் செயலளர் நம்புராஜன் கூறியதாவது:நடிகர் சிம்புவுக்கு சொந்தமான கார் மோதியதில், சென்னை, தேனாம்பேட்டையை சேர்ந்த மாற்றுத் திறனாளி முனுசாமி என்பவர் இறந்துள்ளார். அலட்சியத்தால் மரணம் பிரிவில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓட்டுனர் செல்வத்தை சொந்த ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.ஒரு உயிர் கொல்லப்பட்டதற்கு இதுதான் தண்டனையா?

எனவே, நடிகர் சிம்பு காரால் பலியான மாற்றுத் திறனாளியை, சிம்பு குடும்பத்தார் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். அவருக்கு குடும்பம் இல்லாததால், இந்த பலிக்கு அபராதமாக, 50 லட்சம் ரூபாயை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.