ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள்!!!

புதுடில்லி: லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்துள்ள பதிலில், பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது:செயற்கைக் கோள்களை அனுப்பும் ராக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களையும் ஈடுபடுத்த, இந்திய தேசிய விண்வெளி நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஐந்து பி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் தயாரிக்கப்பட உள்ளன.

‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ மற்றும் ‘லார்சன் அண்டு டியூப்ரோ’ இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நிறுவனம், ராக்கெட் தயாரிப்புக்கு முன் வந்துள்ளது. அதுபோல, பாரத மின்னணு நிறுவனம், அதானி என்டர்பிரைசஸ், பாரத எர்த் மூவர்ஸ் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு நிறுவனமும் இதில் ஆர்வம் காட்டிஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.