மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி: பா.ஜ., எம்.பி., வலியுறுத்தல்!!!

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பார்லி.,யில் பேசிய அம்மாநில பா.ஜ., எம்.பி., ரூபா கங்குலி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதால் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரினார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் திரிணமுல் காங்கிரசின் கிராம பஞ்சாயத்து துணை தலைவர் படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கை மாநில போலீசாரிடமிருந்து சி.பி.ஐ.,க்கு மாற்றி கோல்கட்டா உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வழக்கின் போக்கு குறித்து ஏப்ரல் 7 அன்று அறிக்கை அளிக்கவும் வலியுறுத்தியிருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.