திமுக பிரமுகர் தற்கொலை முயற்சி!
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.,கட்சியை சேர்ந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோலியனூர் ஒன்றியம் கண்டம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அப்துல் கலாம் விவசாய சங்க செயலாளரும் தி.மு.க.,வை சேர்ந்தவருமான ஞானசேகரன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.