டில்லியில் சீன வெளியுறவு அமைச்சர்; எல்லை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுமா?!!

புதுடில்லி: சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக நேற்று இரவு டில்லி வந்தார். நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று(மார்ச் 25) சந்தித்து பேசுகிறார்.

கிழக்கு லடாக்கில், 2020 மே மாதத்தில் இருந்து இந்தியா, சீனா படைகள் இடையே மோதல் போக்கு உள்ளது. இரு நாட்டுப் படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பல சுற்று பேச்சு நடந்தும், படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, திடீர் பயணமாக நேற்று டில்லி வந்துள்ளார். நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று அவர் சந்தித்து பேச உள்ளார். பேச்சின் போது, எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.