கொரோனா இறப்பு போலி சான்றிதழ் முறைகேடு குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி..!

கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கொரோனா இறப்பு போலி சான்றிதழ் அளித்து நிவாரணம் பெற்ற முறைகேடு விவகாரத்தை மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு விசாரிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா இறப்பு நிவாரணம் கோரி வழங்கப்பட்ட சான்றிதழ்களில் 5 சதவீதம் விசாரணைக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

கொரோனாவால் மார்ச் 28-ந் தேதி வரை இறந்தவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது. அதன்பிறகு கொரோனாவால் இறப்பவர்களுக்கு இழப்பீடு கோரி விண்ணப்பிக்கும் காலம் 90 நாட்களாக நீட்டிக்கப்படுகிறது என அந்த உத்தரவில் தெரிவித்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.