ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க சென்னை வீரர் மொயீன் அலிக்கு ‘விசா’ பிரச்சினை தீர்ந்தது!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள 34 வயது இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலிக்கு ‘விசா’ கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்தியா வருவதில் இழுபறி நீடித்தது. 

இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம் ‘விசா’ கிடைத்தது. இதையடுத்து அவர் இந்தியாவுக்கு புறப்பட்டார். இங்கு 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் இணைவார். 
தாமதம் காரணமாக நாளை நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தை தவறவிடும் மொயீன் அலி வருகிற 31-ந் தேதி நடைபெறும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.