ஏமனில் பயங்கரம்: பத்திரிக்கையாளர் கொடூர கொலை!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2014-ம் ஆண்டு தொடங்கி உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு தென்மேற்கு மாகாணமான தைஸில் அடையாளம் தெரியாத நபர்களால் புகைப்பட பத்திரிக்கையாளரான பவாஸ் அல் வாபி என்பவர் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இதை உள்ளூர் போலீஸ் அதிகாரி உறுதி செய்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “கொல்லப்பட்ட புகைப்பட பத்திரிக்கையாளர், வாதி அல் காதி பகுதியில் தனது காரில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுக்கிடந்தார்” என தெரிவித்தார்.
இந்த படுகொலைக்கான பின்னணி உடனடியாக தெரிய வரவில்லை. இதுகுறித்து அங்கு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்கு யாரும் பொறுப்பேற்கவும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிக்கையாளர்களும், புகைப்பட பத்திரிக்கையாளர்களும் அங்கு கொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.