தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த வேண்டும்: டி.வி.எஸ்., குழும தலைவர் அறிவுரை!

கோவை: ”வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,” என, டி.வி.எஸ்., குழுமங்களின் தலைவர் வேணு சீனிவாசன் பேசினார்.

மறைந்த தொழிலதிபர் மகாலிங்கம் நுாற்றாண்டு விழா, கோவை சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அருட்செல்வர் மகாலிங்கம் விருது – 2022’ வழங்கும் விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.