கோடை வெயிலை சமாளிக்க 1000 மெகாவாட் கொள்முதல்!!

சென்னை : கோடை மின் தேவையை சமாளிக்க ஏப்ரல் 4 முதல் மே 20ம் தேதி வரை 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால் மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்ச் முதல் ஜூலை வரை கோடை காலம் என்பதால் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பணிகளில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இதன்படி இம்மாத தேவையை சமாளிக்க 1000 மெகாவாட் கொள்முதல் செய்ய இரு மாதங்களுக்கு முன் இணையதள ‘டெண்டர்’ கோரப்பட்டது. அதில் 475 மெகாவாட் அளவிற்கு தான் மின்சாரம் கிடைத்தது. 1 யூனிட் மின்சாரம் விலை 4.80 ரூபாய்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.