கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இனப்பாகுபாடு வழக்கு!!

சிலிக்கான் வேலி கூகுள் நிறுவனம் அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பின ஊழியர்களை பாரபட்சத்துடன் நடத்துவதாகக் கூறி அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகுள் ஏப்ரில் கர்லி என்பவரை 2014ல் கருப்பின ஊழியர்களை நியமிக்கும் பணிக்கு அமர்த்தியது. பின் ஏப்ரில் கர்லியை 2020ல் கூகுள் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் மீது ஏப்ரில் கர்லி கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கூகுள் நிறுவன தலைமை அமெரிக்க – ஆப்ரிக்கர்கள் மற்றும் கருப்பினத்தவர்களை பாரபட்சத்துடன் நடத்துகிறது. நேர்காணல் முதல் பணிச் சூழல் வரை இனப்பாகுபாடு காட்டப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.