இலங்கையில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தனுஷ்கோடி வந்த அகதிகள் கண்ணீர்!!!

ராமேஸ்வரம் : இலங்கையில் உணவு பொருட்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதுடன், பஞ்சம் தலை விரித்தாடுவதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு வந்த அகதிகள் கண்ணீர் வடித்தனர்.

கடும் பொருளாதார வீழ்ச்சியால், இலங்கையில் உணவு, அத்தியாவசிய பொருட்கள் விலை பன்மடங்கு உயர்ந்தது. மக்கள் வருவாய் இன்றி உணவுக்காக பரிதவிக்கின்றனர். இலங்கை யாழ்ப்பாணம், மன்னாரைச் சேர்ந்த கஜேந்திரன், 24, மனைவி மரியகிலாரி, 20, நான்கு மாத குழந்தை நிசாஜ் மற்றும் தியுரி, 28, எஸ்தர், 11, மோசஸ், 5 ஆகிய ஆறு பேரும், இலங்கை பேச்சாளையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டனர்.

அவர்கள் தனுஷ்கோடியில் இருந்து 7 கி.மீ., துாரம் உள்ள 6ம் மணல் திட்டையில், படகோட்டிகள் இறக்கி விட்டு சென்றனர். மண்டபம் இந்திய கடலோர காவல் படையின், ‘ஹோவர்கிராப்ட்’ கப்பலில் வீரர்கள் அவர்களை மீட்டு மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.