இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. 
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை பாதிப்பான 1 ஆயிரத்து 581- ஐ விட அதிகமாகும்.

இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 542 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது. 
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது. 
அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரத்து 234 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.