ஆபாச ‘வீடியோ’க்களை அனுப்பி பணம் பறிக்கும் வடமாநில கும்பல்!!
மதுரை : மதுரையில் பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், அரசு அதிகாரிகள், குடும்ப பெண்களிடம் மொபைல் போனில், பெண்கள் போல பேசி பழகி, ஆபாச ‘வீடியோ’க்களை அனுப்பி, மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது.
‘வாட்ஸ் ஆப்’மதுரையில் பள்ளி, கல்லுாரி மாணவ – மாணவியர், அரசு அதிகாரிகள், குடும்ப பெண்களிடம் மொபைல் போனில் பெண் ஒருவர் ‘வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்’ வழியாக தொடர்பு கொண்டு நட்பு பாராட்டி இருக்கிறார். நாளடைவில் பேசவும் செய்திருக்கிறார். நட்பு பலமாக ‘வீடியோ காலில்’ பேச ஆரம்பித்திருக்கிறார்.
அப்போது, ஆபாச காட்சியை ஓட விட, எதிர்முனையில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அந்த நொடிகளை ‘ஸ்கீரின் ரிக்கார்டு’ செய்து கொள்வார். சிலர் சபலத்தில் தொடர்ந்து ‘அந்த’ வீடியோவை பார்ப்பதையும் பதிவு செய்து கொள்வார். அதை வெளியிட போவதாக மிரட்டி 5,000 ரூபாய் முதல் ‘கூகுள் பே’ மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். ‘வெளியே தெரிந்தால் அசிங்கம்’ எனக் கருதும் பலரும், கேட்கும் பணத்தை கொடுத்து கவுரவத்தை காத்துக் கொள்கின்றனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.