‘காஷ்மீர் பைல்ஸ்’ படம் உண்மைக்கு எதிரானதாக உள்ளது: ஒமர் அப்துல்லா!!!

ஸ்ரீநகர்: “காஷ்மீர் பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக் மோகன் கவர்னராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங்கின் ஆட்சியை பா.ஜ.க., வெளியிலிருந்து ஆதரித்தது.” என காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற, ‘பாலிவுட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. 90களில், ஜம்மு – காஷ்மீரில் பண்டிட் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறிய நிலை பற்றி இப்படம் காட்சிப்படுத்தியுள்ளனர். இப்படத்தை பிரதமர் மோடி உள்ளிட்ட பல பா.ஜ., தலைவர்கள் பாராட்டினர். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இப்படத்திற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்படம் குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா கூறியதாவது:
‘தி காஷ்மீர் பைல்ஸ்’வணிக திரைப்படமாக இருந்தால் யாருக்கும் பிரச்னை இல்லை. ஆனால், அது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டது என படக்குழுவினர் கூறினால் உண்மை நேர் எதிரானதாக இருக்கும். காஷ்மீரி பண்டிட்கள் புலம்பெயர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் போது பரூக் அப்துல்லா முதல்வராக இல்லை. ஜக்மோகன் கவர்னராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங்கின் ஆட்சியை வெளியிலிருந்து பாஜக ஆதரித்தது. இந்த உண்மை ஏன் படத்திலிருந்து விலக்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.