இது உங்கள் இடம்: நீதிமன்றங்கள் கவனிக்குமா?
மன்னர்மலை மணி, நெல்லையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: உத்தர பிரதேச மாநிலத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில், 51 சதவீதத்தினர் குற்றப் பின்னணி உடையவர்கள்.
அவர்களில், 39 சதவீதம் பேர், கொலை, ஆட்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்கள். அதாவது, மொத்தமுள்ள, 403 எம்.எல்.ஏ.,க்களில், 205 பேர் குற்றப் பின்னணி உடையவர்கள் என, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உ.பி.,யில் மட்டுமின்றி, பஞ்சாப் மாநில விபரங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அங்கும், சட்டசபைக்கு தேர்வானவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களே. ஒவ்வொரு முறை சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் நடந்து முடிவுகள் வெளியாகும் போது, இப்படிப்பட்ட ஆய்வு தகவல்கள் வருவது வழக்கமாகி விட்டது.
ஆனாலும், நிலைமையை மாற்ற எந்த நடவடிக்கையையும், அரசும், அரசியல் கட்சிகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும் தொடர்கிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.