அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு இலங்கையில் மக்கள் போராட்டம்: விலைவாசி உயர்வை கண்டித்து கொந்தளிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் அந்நாட்டின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது. இத்துடன் அந்நிய செலாவணிக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பும் வெகுவாக குறைத்தது. இதனால்,  கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசிகள் உயர்ந்துள்ளன.

எரிபொருள் கொள்முதல் செய்வதற்கு கூட போதிய அந்நிய செலாவணி இல்லாமல் அரசு திண்டாடி வருகிறது. எரிபொருள் பற்றாக்குறையினால், பல மணி நேர தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 23ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, விலைவாசி உயர்வை கண்டித்தும், அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.