மூணு தேர்தல் முடிஞ்சு தான், ஆட்சிக்கு வருவீங்களா?

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: தி.மு.க., அரசு, பழி வாங்கும் நோக்கில், பொய் வழக்கு போடுவதில் புகழ் பெற்ற அரசாக உள்ளது. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் அமளி பூங்காவாக உள்ளது. அ.தி.மு.க., மீது, ‘பேடு இமேஜ்’ ஏற்படுத்தி, ‘இமேஜை டேமேஜ்’ செய்ய முயற்சிக்கின்றனர். கவுரவர்களான தி.மு.க., தற்காலிக வெற்றி தான் பெற்றுள்ளது. பாண்டவர்களான அ.தி.மு.க.,வுக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.