‘மாத்ருபூமி’ நூற்றாண்டு விழா பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்!
கேரளாவில் பிரபல, ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதழின் நுாற்றாண்டு விழா கொண்டாட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மாத்ருபூமி நாளிதழ், 1923, மார்ச் 18ல் துவங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களான கே.பி.கேசவ மேனன், கே.மாதவன் நாயர், அம்பலக்கத் கருணாகர மேனன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், கே.கேளப்பன் ஆகியோர் நாளிதழை துவக்கினர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.