தமிழக பட்ஜெட்; எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? முழு விபரம்!!

சென்னை: இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.36,895 கோடியும், மருத்துவத்துறைக்கு ரூ.17,901 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் தொல்பொருட்களை வைக்க ரூ.10 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* சென்னை வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* சூப்பர் கம்ப்யூட்டர் உட்பட வானிலை மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* நவீன நட்பத்தில் நிபலங்களை அளவீடு செய்யும் வகையில், ரோவர் எந்திரங்களை வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* அரசு நிலங்களை பராமரிக்க சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்நிலை பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
* கொற்கையில் ரூ.5 கோடியில் ஆழ்கடல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
* ஓய்வூதிய திட்டடங்ங்கள் ரூ.4816 கோடி நிதி ஒதுக்கீடு.
* 1 முதல் 10ம் வகுப்புகளுக்கு புத்தகங்கள் வாங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
* நீர்வளத்துறைக்கு 7338.36 கோடி ஒதுக்கீடு.
* 64 அணைகளை புனரமைக்க ரூ.3384 கோடி ஒதுக்கீடு.
* சென்னை அரகே தாவரவியல் பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.
* சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

* கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.1315 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பேரிடர் மேலாண்மைத்துறை ரூ.7400 கோடி ஒதுக்கீடு.
* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்காக ரூ.496 கோடி ஒதுக்கீடு
* சுய உதவிக்குழுக்களுக்கான கடன், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க ரூ.4130 கோடி ஒதுக்கீடு
* கூட்டுறவுத்துறைக்கு ரூ.13,176 கோடி ஒதுக்கீடு
* பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு மானியமாக ரூ.7500 கோடி ஒதுக்கீடு.
* காவல்துறைக்கு ரூ.10,285 கோடி
* வட்டியில்லா பயிர்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்கள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
* எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு.
* சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்த ரூ.849.20 கோடி ஒதுக்கீடு.

* இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* புதிதாக 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்படும். இதற்காக ரூ.1300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* புத்தக வாசிப்பை மேம்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் இலக்கிய திருவிழா என்ற பெயரில் ரூ.5.6 கோடியில் புத்தக காட்சி நடத்தப்படும்.
* வனப்பகுதியில் வரையாடுகளை பாதுகாக்க முதல்கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.
* கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் முன்மாதரி பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி ஒதுக்கீடு.
* தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு.

மாணவர்கள் திறன் மேம்பாடு

* ‛நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 5 லட்சம் மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.50 கோடி ஒதுக்கீடு.
* ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வகையில் பயிற்சி வழங்க ‛தமிழ்நாடு ஒழலம்பிக் தேடல்’ திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.293.26 கோடி ஒதுக்கீடு.
* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.
* கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு 50 கோடி ஒதுக்கீடு.
* அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.250 கோடி ஒதுக்கீடு.

* மருத்துவத்துறைக்கு ரூ.17901.23 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு.
* இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு.
* மானிய விலையில் வீடு கட்டித்தரும் திட்டதிற்கு ரூ.4848 கோடி ஒதுக்கீடு.
* சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்களுக்கு ரூ.705 கோடி ஒதுக்கீடு.
* அம்ரூத் 2.0 திட்டத்திற்கு ரூ.2030 கோடி ஒதுக்கீடு.
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி ஒதுக்கீடு.
* சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

மகளிர்


* மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்திற்கு ரூ.1520 கோடி போக்குவரத்து துறைக்கு மானியமாக ஒதுக்கீடு.
* மாணவர்களுக்கான இலவச பஸ்பாஸ் திட்டத்திற்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு.


* நகர்ப்புற வளர்ச்சித்துறைக்க ரூ.8737 கோடி ஒதுக்கீடு.
* கரூர். கடலூர், சிவகாசி மாநகராட்சிகளின் மேம்பாட்டிற்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு.
* பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3,700 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.808.01 கோடி ஒதுக்கீடு.
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புறு வளர்ச்சித்துறை ரூ.8737 கோடி ஒதுக்கீடு.
* ஊரக சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1906 கோடி ஒதுக்கீடு.
* நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைக்கு ரூ.18,218 கோடி ஒதுக்கீடு.
* கைத்தொழிலை மேம்படுத்த கோவையில் ரூ.5 கோடியில் கைத்தொழில் மேம்பாட்டுக்குழுமம் அமைக்கப்படும்.
* சிறு, குறு, தொழகில் நலத்துறையின் மூலதன முதலீட்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆறுவழிச்சாலை

* சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.135 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலை அமைக்கப்படும்.
* தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் ரூ.13,108 கோடி இழப்பை அரசே ஏற்கிறது.
* கோவை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்படும்.
* மின்கட்டன மானியமாக ரூ.9,379 கோடியை அரசு வழங்கும்.

ஹிந்து அறநிலையத்துறை

* கோவையில் கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும்.
* 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழம்பெரும் திருக்கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.340.87 கோடி ஒதுக்கீடு.
* அரசு ஊழியர்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதற்திற்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.