அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி!!
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: சமூதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது; புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் 4 இலக்கிய திருவிழா நடத்துவதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.