20ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக வலுப்பெறும் வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், “17.03.2022: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.18.03.2022: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.19.03.2022, முதல் 21.03.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி மீனா.