வேட்டை! 12 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!!!

சென்னையில் செயல்படும், சிறிய, பெரிய கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்திய மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், அங்கு பயன்பாட்டில் இருந்த தடை செய்யப்பட்ட, 12 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதை பயன்படுத்திய, வியாபாரிகளிடம் 17.82 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்ததுடன், மீண்டும் பயன்படுத்தினால், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.