ரூ.1.64 கோடியில் இரவு காப்பகங்கள் திறக்க ஏற்பாடு…

சென்னையில், வீடில்லாமல் வீதிகளில் வசிப்போர் வசதிக்காக, தரமணியில், 1.64 கோடி ரூபாயில், இரண்டு இரவு காப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து, அடுத்த மாதத்திற்குள் திறந்து வைக்க, மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில், வீடு இல்லாமல் வீதியில் வசிப்போரை அடையாளம் கண்டு, உணவு, இருப்பிடம் வழங்கும் வகையில், ஐந்து ஆண்டுக்குமுன் இரவு காப்பகம் திட்டம் துவக்கப்பட்டது. அடுத்த மாதம், 2 காப்பகங்களையும் திறக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், ஒரு காப்பகம் ஆண்களுக்கு, மற்றொரு காப்பகம் பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.