ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!
`ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதார தடையை மீறிய செயலாகாது,’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்கள் சந்திப்பில், “எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்கா விதித்துள்ள, பரிந்துரைத்துள்ள பொருளாதார தடைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
ரஷ்யாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவலை ஆதரிக்கும் செயலாகும். இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும். அதே நேரம், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இருப்பது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறும் செயலாக தெரியவில்லை,’’ என்று கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.