நேர்மையான வழக்கறிஞர்களை நியமிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும்’ என, அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கறிஞர் எம்.ஏ.எம்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியகுளம் முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமான் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த உண்மையை மறைத்து, அவர் அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பித்தார். அவரது பின்னணி குறித்து தேனி எஸ்.பி., சரியாக விசாரிக்காமல் பரிந்துரைத்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்