நிறைவேற்றியதெல்லாம் நாங்க – எம்.பி.,க்கு வானதி பதில்!!
‘கோவைக்கு பா.ஜ., அரசு, செய்த நல்ல திட்டங்களை எல்லாம், தாங்கள் செய்ததாக சொந்தம் கொண்டாடிவிட்டு, பா.ஜ., அரசு இதுவரை என்ன செய்தது என கேள்வி எழுப்புவது ஏன்?” என, கோவை எம்.பி.,க்கு பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார். கோவை எம்.பி., இவை எல்லாம் தங்களால் தான் நடந்தது என்று, மக்களை ஏமாற்றும் நோக்கில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதற்கு கோவை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை