நடிகர் விஜய் முடிவில் திடீர் மாற்றம் ஏன்???
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பை மறுத்துள்ள விஜய் தரப்பு, பீஸ்ட் இசை வெளியீட்டு விழாவையும் ரத்து செய்து உள்ளது.உள்ளாட்சி தேர்தல் வாயிலாக, தமிழக அரசியலில் கால் பதித்துள்ள நடிகர் விஜய், பீஸ்ட் உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் அழுத்தமாக கால் ஊன்றி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்ட விஜய், அரசியல் ஆலோசகரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரை சந்தித்து
பேசியதாக தகவல் வெளியானது. இதை விஜய் தரப்பு மறுத்துள்ளது; ‘அது வெறும் வதந்தி’ என்றும் கூறியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.