செம்பரம்பாக்கம் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்!!

மாங்காடு–செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும், தந்தி கால்வாயின் பிரிவு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியின், மதகு- 4ல் இருந்து, மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, கொழு மண்ணிவாக்கம், மாங்காடு, பரணி புத்துார், அய்யப்பன் தாங்கல் வழியாக, போரூர் ஏரிக்கு,தந்தி கால்வாய் செல்கிறது.. இந்த கால்வாயில் இருந்து, நான்கு பிரிவு கால்வாய்கள் பிரிகின்றன.இதில், மாங்காடு, பரணிபுத்துார் வழியாக போரூர் ஏரிக்கு செல்லும் கால்வாயும் ஒன்று. இந்த கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 31 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றை அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.வருவாய் துறை மூலம் இரண்டு நோட்டீஸ்களும், பொதுப்பணித் துறை மூலம் ஒரு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான கால அவகாசம் முடிந்ததை அடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.