கலைஞர் கொண்டு வந்த தமிழரசு: மெருகேத்தும் ஸ்டாலின்!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் ஆக்கப்பணிகளை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்டு வந்த பல்வேறு இதழ்கள் அனைத்தையும், ஒரே அரசு இதழாக “தமிழரசு” எனும் பெயரில் 1970ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் மாத இதழாக அப்போதைய முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். தமிழரசு இதழ், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நான்கு வண்ண வெப்ஆப்செட் இயந்திரம் மூலமாக அச்சிடப்பட்டு மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழரசு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தனி இதழ் ரூ.20 ஆகவும், ஆண்டுச் சந்தா ரூ.240 ஆகவும், 10 ஆண்டுகளுக்கான ஆயுள் சந்தா அஞ்சல் கட்டணம் உட்படத் தமிழரசு தமிழ் ரூ.2000 ஆகவும், தமிழரசு ஆங்கிலம் ரூ.2400 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.