கறிக்கோழி கிலோவுக்கு ரூ.80 உயர்வு; முட்டை விலை ரூ.1 குறைவு!!

வேலுார், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகளில் உற்பத்தியாகும் கறிகோழி, காஞ்சிபுரத்தில் உள்ள சிக்கன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள சிக்கன் கடைகளில் கடந்த டிச., ஜனவரியில் கிலோ சிக்கன், 180 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது, பண்ணைகளில் கறிகோழி உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் கோடை வெயில் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால், கிலோவுக்கு, 80 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. போர் துவங்கியபின், வெளிநாட்டிற்கு முட்டை ஏற்றுமதி செய்வது வெகுவாக குறைந்துள்ளதால், முட்டை ஒன்றுக்கு, 1 ரூபாய் விலை குறைக்கப்பட்டு, 4 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.